/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஹில்டாப்' மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை தடையால் ஏமாற்றம்
/
'ஹில்டாப்' மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை தடையால் ஏமாற்றம்
'ஹில்டாப்' மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை தடையால் ஏமாற்றம்
'ஹில்டாப்' மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை தடையால் ஏமாற்றம்
ADDED : ஜூன் 27, 2024 09:24 PM

கூடலுார் : கூடலுார் நாடுகாணி -தேவாலா அட்டி சாலையை ஒட்டியுள்ள, 'ஹில்டாப்' வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை தடையால் அதிருப்தி அடைந்து திரும்பு கின்றனர்.
கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், நாடுகாணி - தேவாலா அட்டி சாலையை ஒட்டியுள்ள, 'ஹில்டாப்' மலைக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து சென்றனர்.
இந்நிலையில், கூடலுாரில் உள்ள பொன்னுார் தோட்டகலை பண்ணை 'ஹில்டாப்' மலையில் சுற்றுலா தளம் அமைக்க, கடந்த ஆண்டு சுற்றுலா துறை மானிய கோரிக்கையில், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அப்பகுதியில், சுற்றுலா பணிகளை மேற்கொள்வது குறித்து, தோட்டக்கலைத் துறை சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 'ஹில்டாப்' மலைக்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து சென்று வந்தனர்.
இந்நிலையில், டிச., மாதம், வனத்துறை சார்பில்,'ஹில்டாப்' மலை, தங்களுக்கு சொந்தமானது: அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது, வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அறிவிப்பு பலகை வைத்து, கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.எனினும், வன ஊழியர்கள் கண்காணிப்பு இல்லாத நேரங்களில், சுற்றுலா பயணிகள் சிலர் மலை பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஹில்டாப் மலை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அவர்களை அங்கிருந்து விரட்டி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியுடன் திரும்பி செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'மாலை நேரங்களில், ஹில்டாப் மலைக்கு சென்று இயற்கையை ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வனத்துறையின் தடையினால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில், சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா மையம் அமைக்கும் வரை, தற்காலிகமாக வன ஊழியர்கள் கண்காணிப்புடன் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் ,' என்றனர்.