/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் உடைந்ததுq
/
சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் உடைந்ததுq
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, தப்பக்குட்டை அருகே பூசா-ரியூர், காட்டுவளவை சேர்ந்தவர் பழனிசாமி, 58. தறித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, 'ஆக்சஸ்' மொபட்டில் இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை, வளையசெட்டி பிரிவு அருகே, 'இண்டி-கேட்டர்' போட்டபடி திரும்ப முயன்றார்.
அப்போது பூசாரியூரை சேர்ந்த சவுந்தரராஜன், 31, பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்தார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பழனி-சாமி ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதிய-தோடு, தொடர்ந்து அங்கு சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்-கம்பம் உடைந்தது. பழனிசாமியும் படுகாயம் அடைந்தார். மக்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்-தனர். இதையடுத்து மின்வாரியத்தினர் சீர-மைப்பு பணிகளை மேற்கொண்டனர். மகுடஞ்-சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.