ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், குரங்குச்சாவடி, சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில், கார்த்திகை முதல் நாளில் தொடங்கிய மண்டல பூஜை, கடந்த, 27ல் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் சுவாமிக்கு இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மாலை, சிறப்பு பூஜை நடத்தி கொடிமரத்தில் மகர விளக்கு பூஜை கொடியேற்றம் செய்யப்பட்டது. செண்டை மேளம் முழங்க, கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.