/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்
/
ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்
ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: காவிரி உபரிநீர் திட்டம் மூலம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் நங்கவள்ளி ஏரிக்கு உபரிநீர் வருகிறது. அங்கிருந்து, சூரப்பள்ளி ஊராட்சி வாத்திப்பட்டி ஏரிக்கு உபரிநீர் செல்ல இணைப்பு கால்வாய் பணி முடிந்தது.
இந்நிலையில் நங்கவள்ளி ஏரி நிரம்பி, முதல்முறை வாத்திப்பட்டி ஏரிக்கு உபரிநீர் நேற்று வந்தது. இதனால் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மாநில செயலர் சுரேஷ், பொருளாளர் ஜெயவேல், மாவட்ட தலைவர் சீனிவாசன், விவசாயிகள், மக்கள், பூக்கள் துாவி வரவேற்றனர்.