sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜூன் 13, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரகளை: மது வியாபாரி கைது

தேனி: கம்பம் தெற்கு சிறப்பு எஸ்.ஐ., ஜமீன்தார், ஏட்டுக்கள் முத்துக்குமார், சஞ்சீவி ஆகியோர் கம்பம் பைவ் ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப் பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது கிளப்பிற்கு எதிரில் கூடலுார் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் 49, சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்தார். அவரிடம் சென்று மதுபாட்டில்களை ஒப்படைக்க வலியுறுத்தி போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, எஸ்.ஐ., 2 ஏட்டுக்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் அவரிடம் சட்ட விரோத விற்பனைககாக சாக்குப்பையில் மறைத்து பதுக்கியிருந்த 13 மதுபாட்டில்கள் போலீசார் கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

குரூப் 4 தேர்வு எழுத சென்ற பெண் மாயம்

தேனி: எம்.ஜி.ஆர்., நகர் காமராஜர் தெரு நாராயணசாமி மகள் பவித்ரா 21. தேனி தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து முடித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுத, நாராயணசாமியின் மைத்துனர் பிரசாத்குமார் அழைத்துச் சென்று, தேனி கம்பம் ரோட்டில் இருந்து ஆட்டோவில் முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். பின் தேர்வு முடிந்து, பவித்ரா வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் புகாரில் தேனி எஸ்.ஐ., ஜீவனாந்தம் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

டூவீலர் - கார் விபத்தில் கால் முறிவு

தேனி: போடி பத்திரகாளிபுரம் பிள்ளையார் கோயில் தெரு அடைக்கலம் 30. இவரது தந்தை காளிமுத்து 62, கொத்தனார். டூவீலரில் குமுளி - திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் பி.சி.பட்டி பிரிவு அருகே செல்லும் போது, கம்பம் நோக்கி சென்ற உத்தமபாளையம் ராஜ்குமார் ஓட்டிவந்த கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அடைக்கலத்தின் வலது, இடது கால்களில் காயம் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், போலீசார் கார் ஓட்டிவந்த டிரைவர் ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தகராறு : 2 சிறுவர்கள் கைது

தேனி: பழனிசெட்டிபட்டி சுப்பிரமணியசிவா தெரு விஜயக்குமார். இவரது 17 வயது மகன் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த ஜூன் 7 ல் டியூஷன் சென்றவர், சைக்கிளில் பழனிசெட்டிபட்டி டி.பி.என்., ரோடு பெருமாள் கோயில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சைக்கிள் செயின் அவிழ்ந்தது. அப்போது, பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவை 19 வயது சிறுவர், ஆர்.எம்.டி.சி., காலனியை சேர்ந்த 19 வயதுடைவர் இருவரும் தகராறில் ஈடுபட்டு தாக்கி காயம் ஏற்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட 17 வயது பிளஸ் 1 மாணவர் புகாரில் இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற பெண் கைது

தேனி: ராயப்பன்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சையது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் நாராயணத்தேவன்பட்டி தனியார் பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் தெரு வைரம் 51, சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். போலீசார் விசாரணையில், தனது மகன் ராம்குமார் 30, ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக உருவாக்கி இருவரும் இணைந்து விற்பனை செய்து வந்தோம்.' என்றும், தற்போது மகன் வெளியூரில் கஞ்சா விற்பனை செய்ய சென்றுள்ளதாக தெரிவித்தார். ராயப்பன்பட்டி போலீசார் கஞ்சா பெண் வியாபாரி வைரம், அவரது மகன் ராம்குமார் உட்பட இருவர் மீது வழக்குப்பதிந்து, வைரத்தை கைது செய்தனர்.

இளம்பெண் மாயம்

தேனி: உசிலம்பட்டி வடுகபட்டி காலனி தேவி 48. இவர் ஜூன் 4ல் மகள் நந்தினி 25, மகன்களுடன் தேனி அல்லிநகரம் காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு உறவினர் பழனியம்மாள் வீட்டிற்கு வந்திருந்தனர். அன்றிரவு 8:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தினி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் புகாரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.

லாரி டிரைவர் மீது வழக்கு

தேனி: நாமக்கல் மாவட்டம் ஒடுவன் குறிச்சி ஆசாரி தெரு தேவி 43. இவரது மகன் சக்திவேல் 23. இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான லாரியில் கிளீனராக பணிபுரிகிறார். ஜூன் 10ல் லாரியின் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ஒடுவன்குறிச்சி நடுத்தெரு முத்துச்சாமியுடன் 55, இணைந்து சக்திவேல், உத்தமபாளையம் சுங்கச்சாவடி தெருவில் முட்டை லோடு இறக்கினர். அப்போது லாரியின் கதவில் சக்திவேல் ஏறியது தெரியாமல், லாரியை முத்துச்சாமி நகர்த்தினார். இதில் கீழே விழுந்த சக்திவேலின் கால் பாதத்தில் லாரி சக்கரம் ஏறி காயமடைந்தார். தற்போது சக்திவேல் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். உத்தமபாளையம் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us