/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,வின் ஏ டீம் விஜய்: அர்ஜூன்சம்பத் இந்து மக்கள் கட்சி அர்ஜூன்சம்பத் காட்டம்

ADDED : ஜூலை 05, 2025 02:51 AM
தேனி:'தி.மு.க.,வின் ஏ டீம் விஜய்,' என தேனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
அவர் கூறியதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. மாநாடு நடந்தஅதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.
இது வேண்டும்என்றே உள்நோக்கத்தோடு செய்வதாகும். இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
சிவகங்கை திருப்புவனம் அஜித்குமார் போலீசார் தாக்கி கொலையான சம்பவத்திற்கு பொறுப்பேற்று, சாரிம்மா' முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
த.வெ.க., தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக எனஅக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் ஏ டீம் விஜய். இதனால் 2026 தேர்தலில் த.வெ.க., மக்களால் புறக்கணிக்கப்படும்.
அத்தேர்தலில்யாருக்கும் எந்த சாதக, பாதகத்தையும் ஏற்படுத்தாது என்றார்.