/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி
/
மின் ஒயரில் சிக்கி 3 மாடுகள் பலி
ADDED : ஜூன் 20, 2024 09:13 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 46; பால் வியாபாரி. இவர் வங்கி கடன் வாயிலாக, 18 எருமை மாடுகளை வாங்கி வளர்த்து வருகிறார்.
அங்குள்ள, மெரட்டூர் ஏரியில் மாடுகள் தினமும் காலையில் மேய்ச்சலுக்கு சென்று, மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் காலை, 18 எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில், அவற்றில் மூன்று மாடுகள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, மெரட்டூர் ஏரியில் உள்பகுதியில், அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி மூன்று மாடுகள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. கோபாலகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது, தனது மாடுகள் என்பது தெரிந்தது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் மீஞ்சூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை விசாரித்து வருகின்றனர்.