/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இல்லம் தேடி கல்வியாளர்களுக்கு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வியாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 02:01 AM
ஆர்.கே.பேட்டை:'இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்.கே.பேட்டை வட்டார வள மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நேற்று காலை துவங்கிய பயிற்சியில், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேசலு, கிரிஜா தலைமையில் நடந்த பயிற்சியில், மேற்பார்வையாளர் கிரிபாபு பயிற்சி அளித்தார். வட்டார வளமைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வழி நடத்தினர்.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், தங்கள் பகுதியில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை மேற்கொள்ள உள்ளனர்.