/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மழைநீர் கால்வாய் சிமென்ட் சாலை பணி 'விறுவிறு'
/
திருத்தணியில் மழைநீர் கால்வாய் சிமென்ட் சாலை பணி 'விறுவிறு'
திருத்தணியில் மழைநீர் கால்வாய் சிமென்ட் சாலை பணி 'விறுவிறு'
திருத்தணியில் மழைநீர் கால்வாய் சிமென்ட் சாலை பணி 'விறுவிறு'
ADDED : ஜூன் 23, 2025 02:54 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, திருத்தணி நகருக்கு, 110 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கூட்டுக் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கு நகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்வதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து வந்தனர்.
தற்போது, கூட்டுக் குடிநீர் பணிகளுக்காக சேதமடைந்த சிமென்ட் சாலைகள் சீரமைப்பதற்கும், மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 13.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றரை மாதத்திற்கு முன் 'டெண்டர்' விடப்பட்டது.
தற்போது, சிமென்ட் சாலை மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
நகராட்சியில் சேதமடைந்த 186 சிமென்ட் சாலைகள், 13.27 கோடி ரூபாயில் 28.35 கி.மீ., துாரம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இப்பணிகள், நான்கு மாதத்திற்குள் முடிக்கப்படும். மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் படிப்படியாக நிதியுதவி பெற்று சாலைகள் சீரமைக்கப்படும்.
அதேபோல், நகராட்சியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு, மொத்தம் 20 கோடி ரூபாய் தேவை என, தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.