/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் 'ஒப்போ' புதிய போன் அறிமுகம்
/
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் 'ஒப்போ' புதிய போன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் 'ஒப்போ' புதிய போன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில் 'ஒப்போ' புதிய போன் அறிமுகம்
ADDED : ஜூன் 22, 2024 12:48 AM

திருப்பூர்;திருப்பூர் ரயில்வே மேம்பாலம் ரோட்டிலுள்ள சுப்ரீம் மொபைல்ஸ் கிளையில், 'ஒப்போ எப்-27' ப்ரோ பிளஸ் மொபைல் போன் அறிமுக விழா நடந்தது.
நடிகர் நரேந்திர பிரசாத் மற்றும் கிட்ஸ் கிளப் பள்ளிகளின் சேர்மன் மோகன் கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மொபைல் போன் அறிமுகப்படுத்தினர்.
'ஒப்போ' மேலாளர் உமாமகேஸ்வரன், 'இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட்' நிறுவனர் கவிதா, 'லையம் லேட் எக்ஸ்போ வசூத்ராவில்லா' நிறுவனர் வைஷ்ணவி, யூடியூபர் மோகன், ஜெய்குமார், ரித்தேக் பங்கேற்றனர்.
சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
'ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ்' 5ஜி மொபைல் போன், 6.7 இன்ச் ஆமலாய்டு கர்வ்டு டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது. ஐ.பி., 69, 63, 66 ரேட்டிங்குகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் மட்டுமின்றி, சூடான நீர் உட்புகு வதும் தடுக்கப்படுகிறது. 64 மெகாபிக்ஸல் அல்ட்ரா கிளீயர் மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார்.
செல்பி மற்றும் வீடியா கால் அழைப்புகளுக்கு பிரத்யேகமாக 8எம்.பி., கேமரா உள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட மொபைல் 27,999 ரூபாய்; 8 ஜி.பி., ரேம் மற்றும் 256 ஜி.பி., மொபைல் 29,999 ரூபாயாக உள்ளது.
அறிமுக விழா ஆபராக, கிரெடிட் கார்டுகளுக்கு, 10 சதவீதம் கேஷ்பேக், 6 மாதம் வரை வட்டியில்லாத தவணை, 9 மாத இ.எம்.ஐ.,க்கு முன்பணம் இல்லாத நிதியுதவி உண்டு. கூடுதல் விவரங்களுக்கு, 98587 98587 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு, 'Hi' என அனுப்பவும்.