ADDED : ஜூன் 22, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி மற்றும் கோவை பகுதியை சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் இணைந்து தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வாய்ப்பாடு மற்றும் ஆங்கில இலக்கண புத்தகங்களை 24வது ஆண்டாக வழங்கி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அவிநாசி, முத்துசெட்டிபாளையம், புனித தோமையார் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தேவராஜன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, சுமதி முன்னிலை வகித்தார்.
இதில், முதல் பிரதியை சூப்பர் சைசிங் மில்ஸ் நிர்வாகி மாரிமுத்து வழங்கி, துவக்கி வைத்தார்.