சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைப்பு :ஸ்டாலின்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைப்பு :ஸ்டாலின்
UPDATED : ஜூலை 20, 2024 10:50 PM
ADDED : ஜூலை 20, 2024 08:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் 2026 சட்டசபைதேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புகுழு தனது பணியை சிறப்பாக செய்தது. இதனையடுத்து நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைப்பு ரீதியான சீரமைப்புகளை எதிர்கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,கட்சியில் மேற்கொள்ள வேண்டியமாறுதல்களை குழு பரிந்துரைக்கும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.