47வது சென்னை புத்தக கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்து, கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் சுப்பிரமணியன், மகேஷ், செயலர் முருகன் மற்றும் விருது பெற்றவர்கள் .இடம் : ஒய்.எம்.சி.ஏ மைதானம், நந்தனம், சென்னை.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.