இளம் சிசு வளர்ச்சி கண்காணிப்பு உபகரணங்களை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். உடன் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ.பரந்தாமன்.இடம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.