ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் இளைய சகோதரர், ராமகிருஷ்ணின் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் நடந்தது. இதில் கடலூர் கோபி பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.