தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம் 3 ல் லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி நடந்த விழப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவி குழுவினர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.