என்.சி.சி உடான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட , 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் கதையை குறிப்பிடும் விதமாக நடந்த ஆபரேஷன் விஜய் - 1971 எனும் நாடகத்தின் ஒரு காட்சி.இடம் : வேளச்சேரி.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.