திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், இந்திய கம்யூ., கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மெயின் ரோட்டில் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்ததால், பஸ்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.