விவேக பாரதி அமைப்பு சார்பில் ராமநவமி விழா சென்னை, தி.நகரில் நடந்தது. இதில் விவேக பாரதி அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.பி.எஸ்.மணியன் எழுதிய ராமாயணம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. மேடையில் இடமிருந்து - வலம் விவேக பாரதி அமைப்பின் செயலர் மங்கையர்க்கரசி, தர்ம ரக்க்ஷன சமிதி மாநில பொதுச்செயலர் கணபதி, வரலாற்று ஆய்வாளர் ஜயஸ்ரீ சாரநாதன், ஆடிட்டர் கைலாஷ்நாத் மற்றும் விவேக பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள புகழ்பெற்ற ரோஹதாங் கணவாய் அருகே பனி படர்ந்து காணப்படும் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலா பயணியர் குளுகுளு சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் மீன் பிடி தடைக்காலம் 45 நாட்கள் முடிந்து வரும் 15ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதால் புதுப்பிக்கப்பட்ட படகை ஒரு கிளான்ஸ் வெல்லோட்டம் பார்த்தனர்.
தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேரோட்டம் வரும் 28ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.