வைகாசி விசாக தேர்த்திருவிழாவை ஒட்டி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த , ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் வீரராகவப் பெருமாள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.