தமிழ்நாடு மனநல மருத்துவர் சங்கத்தின் 39வது மாநில மாநாடு கோவை அவிநாசி ரோடு ஜெனிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட நீதிபதி ராஜ் பேசினார். அருகே (இடமிருந்து) சங்கச் செயலாளர் சிவ இளங்கோ, பொருளாளர் சிவ சைலன், விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன், சங்க தலைவர் சாப்ரின் ராஸ், முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், சென்னை மனநல மருத்துவ காப்பக இயக்குனர் மாலையப்பன், விழா ஒருங்கிணைப்பு குழு செயலாளர் வெங்கடேஷ், மனநல மருத்துவர்கள் சதானந்த், அருள் சரவணன் உள்ளிட்டோர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.