இன்னாப்பா இது ! குடியிருப்புல மழைநீர் குட்டை ; சென்னை ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை ராயல் என்கிளேவ் பகுதியில் மழைநீர் குட்டை குட்டையாக ஆங்காங்கே ஏங்கி நிற்கிறது பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி 194 வது வார்டின் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்