இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு விமானப்படை விமானங்கள் பங்கேற்கும் தாரன் சக்தி 2024 பயிற்சி கோவை சூலூர் விமானபடை தளத்தில் நடந்தது, இதில் நடந்த சர்வதேச ராணுவ தளவாடம் மற்றும் விமானப்படை கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்ட தமிழக கவர்னர் ரவி. அருகே, ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ், இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி உள்ளிட்டோர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.