கேரளா மாநிலம், வட கரையில் உள்ள பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியில் வாடிக்கையாளர்களின் நகை திருடியது தொடர்பாக வங்கி மேலாளர் மாதா ஜெயகுமாரை கைது செய்த கேரளா போலீசார், இது தொடர்பாக திருப்பூர், புஷ்பா பஸ் ஸ்டாட்டில் உள்ள தனலட்சுமி வங்கியில் அடகு வைத்த 4.6 கிலோ தங்க நகைகளை மீட்டு சென்றனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.