வட மாநிலத்தவர்கள் துர்கா பூஜையில் வைத்து வழிபாடு நடத்துவதற்கான துர்கா சிலைகளை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம் தி.நகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா வளாகத்தில்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.