குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை கழிப்பறை கட்டுவதை கண்டித்து திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.