கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கரையை ஒட்டியுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்யும் மண்டபத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் நீர் ஓடுகிறது. ஆனாலும் பூஜாரிகள் மண்டபத்தின் விளிம்பு சுவர்களில் உட்கார்ந்தும், நின்றும் சடங்குகளை தொடர்கின்றனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.