தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை, ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் உள்ளது. மேல்பவானி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, பவானி சாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அதனால், அணையின் ஒரு ஷட்டர் வாயிலாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்