திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலின் பிரம்ம தீர்த்த குளத்தில், சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதந்தன. அவற்றை அகற்றும் பணியில், நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர். அதிகாரிகள் கூறுகையில் 'பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறப்பது வழக்கம். நீர்வரத்து இருந்தால் அதிக பாதிப்பு இருக்காது' என்றனர்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.