கொரட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பாடலாதரி சிபாத்தம்மன் கோவிலுக்கு, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரம் பெண்கள் பங்கேற்று, 4 கி.மீ., பால் குடம் எடுத்து சென்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.