கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வேயில், ஜே.கே., டயர் சார்பில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில், சாரல் மழைக்கிடையே சீறிப்பாய்ந்த கார்கள்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.