போக்குவரத்து நெரிசலான இடத்தில் காரில் சென்றவர், ஒரு கையில் தன் குழந்தையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் ஸ்டீரிங்கை இயக்கியபடி ஓட்டிச் சென்றார். இதை பார்த்தவர்கள் மனம் பதைபதைத்தது. இதுபோன்ற செயல்களை தவிர்த்தால் நல்லது. இடம்: காமராஜர் ரோடு, திருப்பூர்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.