ஊட்டி- மஞ்சூர் சாலையில் உள்ள கொல்லிமலை பள்ளத்தாக்கில், கலப்பு மலை காய்கறி விவசாயத்தில் சிறு விவசாயிகள் ஈடுபட்டு வருவதால், ஒரே நேரத்தில் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட் உட்பட பல காய்கறிகளை அறுவடை செய்கின்றனர். இத்தகைய பசுமையான விவசாய தோட்டங்கள், மலை பாதையில் வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.