Dinamalar-Logo
Dinamalar Logo


/இன்றைய போட்டோ
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள புனித இடமான பிருந்தாவனத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி பண்டிகை தனித்துவம் வாய்ந்தது. இங்கு வசிக்கும் விதவையர் தங்கள் வாழ்வில் ஒளி வரட்டும் என்ற பிரார்த்தனை உடன் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளியை வரவேற்பர். அந்த வகையில் தீபம் ஏற்றி வரவேற்ற விதவையர்.
17-Oct-2025

இன்றைய போட்டோ22-Mar-2026
2/
தேர்தலையொட்டி பெசன்ட் அவென்யூ சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.இடம் : அடையாறு
22-Mar-2026

3/
திருப்பூர், மாவட்டம் குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
22-Mar-2026

4/
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
22-Mar-2026

5/
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.
22-Mar-2026

6/
சென்னௌ சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சி.எஸ்.கே ரோர் 2026 விழாவில், கோப்பைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தற்போதைய சி.எஸ்.கே அணியின் வீரர்கள்
22-Mar-2026

7/
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சி.எஸ்.கே ரோர் 2026 விழாவில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குழுவினரின் இசை கச்சேரி நடந்தது
22-Mar-2026

8/
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது . இரவு விநாயகர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
22-Mar-2026

9/
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மினி பஸ்ஸில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.
22-Mar-2026

10/
வடலூர் நான்கு முறை சந்திப்பில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ரோட்டோரத்தில் உள்ள அரசியல் கொடிக்கம்பங்களை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர்.
22-Mar-2026

Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us