கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.