திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உண்ணாமுலை அம்மனும்-அண்ணாமலையாரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.