போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் இருந்து மதுரைக்கு வரும் ஜனவரி 2ல் மதிமுக பொதுச்செயலர் வைகோ மேற்கொள்கிறார். அதன் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து அழைப்பு விடுத்தார். இடம்: திமுக தலைமையகம், சென்னை.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.