திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உத்சவத்துடன் துவங்கியது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், தாயார் சன்னதி கோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.