நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு முட்டை லோடு ஏற்றி சென்ற மினி லாரி, விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 60 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணாகின.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.