பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. 'ரெங்கா… ரெங்கா...' கோஷம் விண்ணைப் பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் நம் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.