இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயனின் மகளான காம்யா அண்டார்டிகாவின் தென்துருவத்தில் ஸ்கையிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு உலக சாதனை படைத்திருக்கிறார். சர்வதேச அளவில் இச்சாதனையை படைத்த இரண்டாவது இளம் பெண் இவர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.