திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் கொங்கு ஏழூர் சிவத்தலங்களில் முதன்மையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, முதலை வாயில் சென்ற குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த அதிசயம் நிகழ்ந்த தலம். இங்கு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடராஜருக்கு தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.