உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், புகழ்பெற்ற மகர மேளா திருவிழா துவங்கியது. பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பெண் ஒருவர் நதிக்கரையில் அகல் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.