தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : ஏப் 18, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:  காரக்குழம்பு செய்யும் போது அதிகம் தண்ணீர் சேர்த்து விட்டால், ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை வறுத்து அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகும்.

 ரவை உப்புமா செய்யும் போது, கடலைப்பருப்பு நிறைய சேர்த்து தாளித்தால் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

 அரிசி கழுவிய நீரில் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும்.

 தக்காளி தொக்கு செய்யும் போது, இறுதியாக கொத்துமல்லி இலைகள் தூவினால் தொக்கு வாசனையாக இருக்கும்.

 குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்தால், பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும். அதே சமயம் பாகின் சுவையும் கூடும்.

 உளுந்து வடை செய்யும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி தழையை சேர்த்து மாவில் அரைத்தால், வடை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

 பிளாஸ்டிக் பையில் பழுக்காத தக்காளி பழங்களுடன், ஒரு பழுத்த தக்காளி பழத்தை போட்டு வைத்தால் அனைத்து தக்காளிகளும் விரைவில் பழுத்து விடும்.

 மசால் வடைக்கு மாவு அரைக்கும் போது நறுக்கிய கீரை, கோஸ், வாழைப்பூ, போன்றவற்றை சேர்த்தால் சுவை கூடும். உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

 முட்டைக்கோஸை வதக்கும் போது, சிறிது பால் சேர்த்து வதக்கினால், பொரியல் சுவையாக இருக்கும்.

 ஆப்பாயில் செய்யும் போது முட்டை சரியாக வரவில்லை என்றால், அதை முட்டை பொடி மாஸாக மாற்றிவிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us