தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ உடலுக்கு வலுவூட்டும் மோர் களி

 உடலுக்கு வலுவூட்டும் மோர் களி

 உடலுக்கு வலுவூட்டும் மோர் களி


ADDED : ஏப் 18, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மோர் களியும் ஒன்று. மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு கொண்டு செய்யக்கூடியது. ஏறக்குறைய உப்புமா செய்வது போன்று இருக்கும். உப்புமாவில் ரவை பயன்படுத்துவோம்; இதில், அரிசி மாவும், தயிரும் பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்

* அரிசி மாவு - 200 கிராம்

* தயிர் - 200 மில்லி

* மோர் மிளகாய் - 10

* கறிவேப்பிலை - சிறிதளவு

* நெய் - 3 ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 50 மில்லி

* கடுகு - ஒரு டீஸ்பூன்

* உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்

* பெருங்காயம் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

செய்முறை

 வாணலியில் 200 கிராம் அரிசி மாவு, 200 மில்லி தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி, மூன்றையும் நன்றாக கலக்கவும்

 பெரிய வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பத்து மோர் மிளகாயை பாதியாக உடைத்து போட்டு வறுக்கவும்

 அடுத்து ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பெருங்காயம் போட்டு வறுக்கவும்

 பின் அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி கிண்ட ஆரம்பிக்கவும். மிதமான சூட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிண்டி கொண்டே இருக்க வேண்டும்

 ஆரம்பத்திலேயே சொன்னது போல இது உப்புமா செய்முறை தான். தண்ணீர் வற்றி மோர் களி தயாராகும்

 களி ஓரளவு கெட்டியானதும் தேவையான அளவு உப்பு சேருங்கள். இப்போது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிண்டுவதை தொடருங்கள்

 மோர் களி கெட்டியான பிறகு அடுப்பை ஆப் செய்து, ஒரு சதுர வடிவிலான பாத்திரத்திற்கு மாற்றி, அரைமணி நேரம் ஆறவிடவும்

 சிலர் அப்படியே சாப்பிட விரும்புவர். ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்

 ஆறவிட்ட மோர் களி, கேக் போல மாறிவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்

 பேனில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் ரோஸ்ட் செய்வது போல மோர் களி துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us