தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் கேக்!

 குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் கேக்!

 குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் கேக்!


ADDED : ஜூன் 12, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

குழந்தைகளுக்கு 'சீஸ்' என்றால் மிகவும் பிரியம். பேக்கரிகளுக்கு சென்றாலும் கூட, சீஸ் நிறைந்த கேக்குகள், ஸ்நாக்ஸ்களையே விரும்பி சாப்பிடுவர். இதே இந்த வாரம் நீங்கள் வீட்டில் செய்து கொடுங்கள். அதன் பின், 'பேக்கரிக்கு போக வேண்டாம்; வீட்டிலேயே செய்து கொடுங்கள்' என உங்களை நச்சரிப்பர். செய்முறை: சீஸ் கேக் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் பட்டர்பேப்பர் வைத்து கொள்ளவும். பின் ஒரு சிறிய பவுலில் பிஸ்கட்களை உடைத்து போட்டு கொள்ளவும். அதனுடன் உருக்கிய வெண்ணெய், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை பட்டர் பேப்பரில் வைத்து நன்கு செட் செய்து, பிரிஜில் அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். நன்கு நுரை வந்தவுடன் அதனுடன், எடுத்து வைத்துள்ள சர்க்கரை, வெண்ணிலா எசெசன்ஸ் போன்றவற்றை சேர்த்து, ப்ளெண்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பின், கிரீம் சீஸை, அரை மணி நேரம் கழித்து பிரிஜில் இருந்து எடுத்து வைத்த பிஸ்கட் பேஸ்டுடன் சேர்த்து, உங்களுக்கு பிடித்த கேக் வடிவங்களில் வடிவமைத்துக் கொள்ளவும்.

இந்த கிரீம் சீஸ் கலவையை பிரிஜில் இருந்து எடுத்து பிஸ்கட் பேஸ் உடன் சேர்க்கவும். கேக் மாதிரி வடிவமைக்க வேண்டும். இதையடுத்து, லேசான தீயில் ப்ளூபெர்ரி பழங்களை சூடாக்கி, அதனுடன் சர்க்கரை போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை செய்து வைத்துள்ள சீஸ் கேக் மீது தடவி, 5 மணி நேரம் ப்ரீஜில் வைத்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ருசியான சீஸ் கேக் ரெடி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us