
'என் கண் முன்னால் வளர்ந்தவர்' என, உழைத்து உயர்ந்தவராக தமிழக முதல்வரால் அடையாளம் காட்டப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் பதில் கேட்கிறது தமிழகம்!
1. எல்லாருக்கும் பொதுவான அமைச்சராகிய நீங்கள் தி.மு.க., கரை வேட்டி உடுத்தியபடி, 'மாணவர்கள் மத அடையாளங்கள் இன்றி ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சீருடை ெகாண்டு வரப்பட்டது' எனப் பேசுவது நியாயமா?
2. பள்ளிக்கு வருகை தராத மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு காரணம் கேட்கும் நீங்கள், 'பிள்ளையின் படிப்புக்கு இடையூறாக குடும்ப உறுப்பினரது குடிப்பழக்கம் காரணமாக இருக்கிறதா' என்று ஒருமுறையாவது கேட்டதுண்டா?
3. தகுதியற்ற பலரும் 'மகளிர் உரிமைத் தொகை' பெறும் சூழலில், 'அரசின் திட்டம் என்பது பால்; இதை, இல்லாதோர் இல்லங்களில் முறையாக சேர்க்கும் நிர்வாகமே ஸ்டாலினிசம்' என்ற கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறீர்களா?
4. 'பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.19 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது' எனும் தங்களின் வருத்தம், பாலியல் தொந்தரவு தந்த பள்ளி ஆசிரியரிடமிருந்து மாணவி தன்னை தற்காத்துக் கொண்டதாய் ஏதேனும் செய்தி வைத்திருக்கிறதா?
5. நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு உள்ளது எனில், இதனை நேரலையில் நிரூபிக்க தமிழக முன்னணி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி ஏதும்நடத்தும் திட்டம் உண்டா?
6. 'காடு இருந்தால் பறிக்கப்படும்; காசு இருந்தால் பிடுங்கப்படும்; ஆனால், உன் கல்வியை யாராலும் திருட முடியாது' எனும் அசுரன் வசனம் பேசும் உங்களால், 'கல்வி பயின்றவன் எவனும் குற்றம் புரிவதில்லை' எனச் சொல்ல இயலுமா?
7. 'ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அறநிலையத் துறையின் சாதனைகளை 'முருகன் மாநாடு' பறிக்கலாமா' என்பவரே... இன்றைய முதல்வர் திறந்து வைத்த முந்தைய ஆட்சி திட்டங்களின் பட்டியல் தருவீரா?
7½'திருநீறு பூசி அழிக்கும் 'பகுத்தறிவு' பற்றி...?