sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

குறை ஒன்றும் இல்லை

/

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை


ஜன 05, 2025

ஜன 05, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிதுனா, தயார்படுத்தி வைத்திருந்த எல்லா கோப்புகளும் சரியா இருக்கானு பாத்துட்டியா?'

'எடுத்துக்கிட்டேன் மாதவ். நல்லபடியா நடந்தப்புறம் போன் பண்றேன்'


'எப்படி நடந்தாலும் போன் பண்ணு' என்ற கணவனை சிரித்த படியே பார்த்து விட்டு கிளம்பினாள்.


இன்று பள்ளியில் பள்ளி நிர்வாகத் தலைவருடன் ஆசிரியர்கள் கூட்டம், சாதாரணமாய் நடக்கும் கூட்டமல்ல. இன்று இவளை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்க கூட போகும் கூட்டம்.


'அப்பா, அம்மாக்கு ரொம்ப கவலையா?' என நேற்றிரவு குழந்தை கேட்டபோது மாதவ் சொன்ன அந்த வாக்கியம் சுரீரென சுட்டது. மிகச் சரியான சொற்றொடர்! 'ஆட்டி வைக்கும் ஆட்டிசம்'


இக்காலத்தில் பலரும் பரவலாகக் கேட்கும் வார்த்தை ஆட்டிசம். முன்பெல்லாம் கதைகளில் சினிமாக்களில் பார்த்த சில பிரச்சனைகள், சங்கடங்கள் தங்கள் வீடுகளிலும் அக்கம் பக்கங்களில் இக்காலங்களில் சந்திக்கின்றோம். அதேநேரம் அதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் நிறையவே வந்திருக்கின்றன. இருந்தாலும் அதனை உடனிருந்து அனுபவிக்காத பலரின் மனம் இன்றும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மட்டுமல்லாமல் வெறுக்கின்றது.


இங்கு தான் மக்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்பதே மிதுனாவின் வாதம். ஆட்டிசம் என்பது மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த குறைபாடுகளுள் ஒன்று, நோயல்ல. உங்கள் மொழியை குழந்தையின் நிலைக்கு ஏற்ப மாற்றுங்கள் தெளிவாகப் பேசுங்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் காட்டும் படியான சைகைகளை பயன்படுத்துங்கள். குழந்தைகளின் பேச்சை, தகவல் தொடர்பு முயற்சிகளை நீங்கள் கவனத்துடன் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை நிரூபிக்கவும், அவற்றை ஒருபோதும் கைவிடாதீர்கள்.


மற்ற குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்ள உங்கள் பிள்ளைக்கு கற்றுக் கொடுங்கள் மற்றும் என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணத்தைக் காட்டுங்கள். மற்றவர் களுடன் ஒத்துழைக்கும் விளையாட்டை ஊக்குவியுங்கள் சின்ன சின்ன முன்னேற்றங்களை எல்லாம் பாராட்டுக்கள். இது அவர்களின் சமூக திறன்களை மேம்படுத்த உதவும்.


முக்கியமாக குழந்தை உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறெல்லாம் சமீப காலத்தில் ஒரு சில வகுப்பு ஆசிரியர்களிடம் விளக்கிப் பேசப்போகி பள்ளியில் பலருக்கும் பகையானாள்.


மிதுனா ஒரு பெரிய தனியார் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக வேலை பார்க்கிறாள். ஆங்கில ஆசிரியராக உள்ளே நுழைந்தவள், அங்கு அவள் செல்லும் சில வகுப்பறைகளில் ஓரிரு ஆட்டிசம் உள்ள குழந்தைகள் சரியாகக் கவனிக்கப்படாமல் இருப் பதை அறிந்தாள். அதிகப் பணம் கட்டிச் சேர்க்கிறார்கள், இங்கே தங்கள் குழந்தைகளுக்கு சில அங்கீகாரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ஏனெனில் பல பெற்றோர்கள் கூறியதிலிருந்து புரிந்து கொண்டாள். ஆனால் பெற்றோரிடம் இந்நிர்வாகமோ ஆசிரியர்களோ கொடுக்கும் நிறைய நம்பிக்கைகள் அத்தனையும் பொய் என உணர்ந்த போது அக்குழந்தைகள் மேல் பாவமும், இரக்கமும் தோன்றியது. மனநல மருத்துவரான தன் தோழியிடம் கடந்த ஆறு மாதங்களாக இதைப் பற்றி கேட்டு அறிந்து சில உதவிகளின் மூலம் அக்குழந்தைகளை கையாளத் தொடங்கினாள் மிதுனா.


அங்கு தான் பிரச்சனை துவங்கியது. பிற ஆசிரியர்கள் தங்களால் முடியாததை, தங்கள் கவனமின்மையை இவள் உறுதிப்படுத்துகிறாளே என்ற கோபம் தீயாய் பரவி அங்கே இவளுக்கு எதிரான குழு தொடங்கியது. அதன் பொருட்டு இவளின் தலையீட்டை நிறுத்தவும், புகார்கள் கூறவும் ஆரம்பித்தனர். அவள் நல்லது தான் செய்கிறாள் என பல பெற்றோருக்கே தெரிந்தாலும் அவர்களாலும் ஏதும் செய்ய முடியவில்லை.


இறுதியில் இதோ வெளிமாநிலம் சென்றிருந்த பள்ளியின் நிர்வாகி வரவழைக்கப்பட்டார்! இன்று பஞ்சாயத்து.


சில வகுப்புகள் விளையாட்டு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் மிதுனாவை எதிர்க்கும் ஆசிரியர்களுடன் சந்திப்பு ஏற்பாடானது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு இவள் மேல் குற்றங்கள் வைக்கப்பட்டன. நிர்வாகிக்கு, அவரது பிள்ளைகள் நல்ல நிலையில் வாழ்க்கை அமைந்து வெளிநாட்டில் வாழ்கின்றதால் யாரைப்பற்றியும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இவளின் முயற்சிகள் பள்ளியின் வளர்ச்சியை பாதிப்பதாகவே உணர்ந்தார்.


'சார்,விளையாடுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும், வேலை செய்வதற்கும் எப்போதும் வெளிப்புறத்துக்கே கூட்டிட்டுப் போறாங்க, கலர் பெயிண்ட் அடிச்ச சுவர்கள் வேணும், நல்ல ஒளி வேணும். கண்ணைக் கவரும் வால்பேப்பர்கள் வடிவமைக்கப்பட்ட திரைச்சீலைகள், பிளைண்ட்கள் அல்லது தரைவிரிப்புகளை ஒற்றை நிறத்தில் தொடங்கி படிப்படியாக நிறங்களை சேகரிக்கும் ஏற்பாடு செய்யணும், பூட்டக்கூடிய பெட்டிகள் அல்லது பெட்டிகளில் பொம்மைகளை ஏற்பாடு செய்யனும், விஷயங்களை ஒழுங்கமைக்க, பெட்டிகளை லேபிளிடுங்க அல்லது பிக்டோகிராம்களைப் பயன்படுத்துங்க.


(ஒவ்வொரு பெட்டியிலும் பொம்மைகளின் குழுக்களின் வரைபடங்கள்). வகுப்புக்கு வகுப்பு அக்குழந்தைகளை அலைக்கலைக்காமல் இருக்கனும் என ரொம்ப எங்களை தொந்தரவு பண்றாங்க சார்” என துக்கம் தொண்டையை அடைக்க புகார் கூறிக்கொண்டே வந்தனர்.


நல்ல குடிமக்களை உருவாக்கும் சக்தி கொண்ட, பாரபட்சம், பொறாமை என இல்லாது இரக்கமும் அன்பும் சொல்லித் தரவேண்டிய ஆசிரிய நண்பர்கள், தன் நிலை அறியாத அப்படிப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காது இவ்வாறெல்லாம் புகார் சொன்னது மிதுனாவுக்கு வருத்தமும் கோவமும் அளித்தது.


மிதுனாவோ கொஞ்சமும் தடுமாறாமல் ஒரு இறுக்கத்தில் இருந்த பள்ளி உரிமையாளருக்கு, பாரதியின் வரிகளையும், நமக்கெல்லாம் இக்காலத்தில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் நம்பிக்கை வார்த்தைகளையும் சொல்லி, ”நம்மைப் போலவே அக்குழந்தைகளை பாவியுங்கள். அதற்கான முயற்சி எடுக்கும் என்னைப்போன்ற ஆசிரியர்களை நிறைய உற்சாகப்படுத்துங்கள், இவர்கள் மனதை விசாலப்படுத்துங்கள்” என பலவாறு எடுத்துக் கூறி விட்டு எழுந்தாள்.


நிர்வாகி ஏதும் பதில் கூறு முன்னும், இவள் அவரிடம் திட்டு வாங்குவாள் என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் முன்னும் எதையும் எதிர்பார்க்காது, ” நான் தொடர்ந்து என் செயல்களை செய்யத்தான் போகிறேன், இப்பள்ளியில் இல்லையென்றாலும் எப்பள்ளியிலும் என்னால் முடியும்” என நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.







      Dinamalar
      Follow us