Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்/சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்
11 ஏப் 2018

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

சிம்மம்நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. சொத்து வாங்க யோகம் கூடி வரும். குருபகவான் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருக்கிறார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் வெல்லும் ஆற்றல் உண்டாகும். குரு 2018 அக்.5ல்  4-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போதும் அவரால் நன்மை தர இயலாது. அவர் மன உளைச்சல், வீண் பகையை உருவாக்குவார். 2019 பிப். 10ல் 5-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை அதிகரிக்கும்.

ராசிக்கு 12-ம் இடமான கடகத்தில் இருப்பதால்  பொருள் விரயம் ஏற்படலாம். 2019 பிப்.13ல் அவர் இடம் மாறி 11-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.  

கேது  6-ம் இடமான மகரத்தில் இருப்பதால் செயலில் அனுகூலம் ஏற்படும். 2019 பிப்.13ல் 5-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவது சிறப்பானதல்ல. சனிபகவான்  5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளதால் குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடிகொள்ளும். சனியின் 7-ம் இடத்து பார்வையால் நன்மை கிடைக்கும்.

2018 ஏப்ரல் – செப்டம்பர் எந்த செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.  குருவின் பார்வை பலத்தால் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. ஆனால் சிற்சில தடைகளை கடந்த பின்னரே அனுகூலம் பிறக்கும். கேதுவால் பின்தங்கிய நிலை மறையும். பொன், பொருள் தாராளமாக கிடைக்கும்.

பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.  

வியாபாரிகள் சீரான வளர்ச்சி பெறுவர். யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசின் வகையில்  சலுகை எதிர்பார்க்க முடியாது.   வெளியூர் பயணம் அனுகூலம் தரும்.

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் பெறலாம். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். எதிர்பார்த்த பதவி, புகழ் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டி யதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.

விவசாயிகள் முன்னேற்ற பலன் காண்பர். நிலக்கடலை, கிழங்கு பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகார முடிவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல்  வீண் அலைச்சல், மன உளைச்சல், உறவினர் பகை உருவாகலாம்.
கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படலாம். 2019 பிப்.10க்கு பிறகு சமூக மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெண்களின் ஆதரவால் பொன், பொருள் சேரும்.

பணியாளர்கள்  சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  தனியார் துறையில் இருப்பவர்கள் பிப்.10க்கு பிறகு பதவி உயர்வு காண்பர்.

வியாபாரிகள் வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.  

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத் தாகும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். பிப்.13 க்கு பிறகு எதிலும் விடாமுயற்சி தேவைப்படும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை பின்பற்றுவது நன்மை தரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். பிப்.13 க்கு பிறகு சுமாரான பலன் உண்டாகும்.

பெண்களால் குடும்பம் சிறக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு நெய் தீபம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap