உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் ஒரே படத்தில் கீர்த்தி, கிர்த்தி

தெலுங்கில் ஒரே படத்தில் கீர்த்தி, கிர்த்தி


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கீர்த்தி சுரேஷ், கிர்த்தி ஷெட்டி. இருவரும் தற்போது ஒரே படத்தில் நடிக்க உள்ளார்கள்.

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், கல்யாண் ராம் மற்றும் பலர் நடிக்க உள்ள புதிய படத்தில் கீர்த்தி, கிர்த்தி இருவரும்தான் கதாநாயகிகள்.

வெங்கடேஷ் ஜோடியாக கீர்த்தி, கல்யாண் ராம் ஜோடியாக கிர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கிர்த்தி அடுத்தடுத்த நாட்களில் அவரது படங்களின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்த போது அதில் கலந்து கொண்டார் கிர்த்தி. படத்தில் அவர்தான் கதாநாயகி. மறுநாளான நேற்று ஹைதராபாத்தில் நடந்த அனில் ரவிப்புடி படத்தின் தெலுங்குப் பட பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழில் கிர்த்தி தற்போது ரவிமோகன் நடிக்கும் 'ஜீனி' படத்தில் நடித்து முடித்துள்ளார். கீர்த்தி நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' படம் ஜுலை 24ம் தேதி வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !